வரலாற்றில் இன்றைய முக்கிய- நிகழ்வுகள்




காலம் முக்கிய நிகழ்வுகள்
915 இத்தாலியின் முதலாம் பெரிங்கார் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.
1592 முதலாவது ஆங்கிலேயக் கப்பல் எட்வேர்ட் பொனவென்ச்சர் இலங்கைத் தீவின் காலியை வந்தடைந்தது.
1795 ஜோன் ஜார்விஸ் யாழ்ப்பாணத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
1799 வீசுலொக் சமரில் ஆஸ்திரியப் படை பிரெஞ்சுப் படைகளை வென்றது.
1800 மியூனிக்கு அருகில் ஓகன்லிண்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவைத் தோற்கடித்தன.
1818 இலினொய் அமெரிக்காவின் 21-வது மாநிலமாக இணைந்தது.
1854 அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் பல்லராட் என்ற இடத்தில் தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது படையினர் சுட்டதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
1903 சேர் என்றி பிளேக் பிரித்தானிய இலங்கையின் ஆளுநராக நியமனம் பெற்று கொழும்பு வந்து சேர்ந்தார்.
1904 வியாழனின் நிலா இமாலியா கலிபோர்னியாவின் லிக் வான்காணகத்தில் சார்ல்சு பெரின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
1910 நவீனகால நியான் ஒளி முதற்தடவையாக பாரிசில் காட்சிப்படுத்தப்பட்டது.
1912 பால்கன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பல்காரியா, கிரேக்கம், மொண்டெனேகுரோ, செர்பியா ஆகியன உதுமானியப் பேரரசுடன் போர் நிறுத்த உடன்பாடு கண்டன. 1913 பெப்ரவரி 3 இல் போர் மீண்டும் தொடங்கியது.
1919 இருபது-ஆண்டுகள் கட்டுமானப் பணியின் பின்னர் கியூபெக் பாலம் திறக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் இரு தடவைகள் பாலம் இடிந்து வீழ்ந்து 89 பேர் உயிரிழந்திருந்தனர்.
1927 முதலாவது லாரல் மற்றும் ஹார்டி திரைப்படம் வெளியிடப்பட்டது.
1944 கிரேக்கத்தில் ஏதென்சு நகரில் கம்யூனிஸ்டுக்களுக்கும் அரச படைக்கும் இடையில் உள்நாட்டுப் போர் வெடித்தது.
1959 சிங்கப்பூர் பிரித்தானியப் பேரரசின் கீழ் சுயாட்சி பெற்று ஆறு மாதத்தின் பின்னர் சிங்கப்பூரின் தற்போதைய கொடி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1967 தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் கிறித்தியான் பார்னார்டு தலைமையில் உலகின் முதலாவது இதய மாற்று அறுவை சிகிச்சை 53 வயது லூயிசு வாசுகான்சுக்கி என்பவர் மீது வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்: பாக்கித்தான் செங்கிசுகான் நடவடிக்கை என்ற பெயரில் இந்தியா மீது போர் தொடுத்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் முழுமையான போர் வெடித்தது.
1973 வியாழனின் முதலாவது மிகக்கிட்டவான படங்களை பயனியர் 10 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.
1976 ரெகே பாடகர் பொப் மார்லி இரு தடவைகள் சுடப்பட்டுக் காயமடைந்தார். ஆனாலும் இவர் இரு நாட்களின் பின்னர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
1978 வர்ஜீனியாவில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 6 பேர் கொல்லப்பட்டு 60 பேர் காயமடைந்தனர்.
1979 அயத்தொல்லா ரூகொல்லா கொமெய்னி இரானின் உயர் தலைவரானார்.
1984 போபால் பேரழிவு: இந்திய நகரான போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இடம்பெற்ற நச்சு வாயுக் கசிவில் 3,800 பொது மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டனர். 150,000-600,000 பேர் வரையில் காயமடைந்தனர். (இவர்களில் 6,000 பேர் வரையில் பின்னர் இறந்தனர்). உலகில் இடம்பெற்ற மிக மோசமான தொழிற்சாலை விபத்து இதுவாகும்.
1989 பனிப்போர்: மால்ட்டாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து அமெரிக்க அரசுத்தலைவர் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ், சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் ஆகியோர் பனிப்போர் முடிவடையும் கட்டத்தில் உள்ளதாக அறிவித்தனர்.
1992 80,000 தொன் பாறை எண்ணெயுடன் சென்ற கிரேக்கக் கப்பல் எசுப்பானியா அருகில் மூழ்கியதில் எண்ணெய் முழுவதும் கடலில் கசிந்தது.
1992 உலகின் முதலாவது குறுஞ்செய்தி தனி மேசைக் கணினியில் இருந்து வோடபோன்(Vodafone) தொலைபேசி ஒன்றுக்கு அனுப்பப்பட்டது.
1994 பிளேஸ்டேசன் சப்பானில் வெளியிடப்பட்டது.
1997 நிலக் கண்ணிவெடிகளைத் தயாரிப்பது, மற்றும் பயன்படுத்துவதத் தடை செய்யும் ஒப்பந்தத்தில் அமெரிக்கா, உருசியா, சீனா தவிர்ந்த 121 நாடுகள் ஒட்டாவாவில் கையெழுத்திட்டன.
1999 செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்ட மார்சு தரையிறங்கியின் தொடர்புகளை நாசா நிறுவனம் அவ்விண்கலம் செவ்வாயின் வளிமண்டலத்தை அணுகிய போது இழந்தது.
2007 இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தேர்வுத் துடுப்பாட்டத்தில் 709 இலக்குகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார்.
2009 சோமாலியா, முக்தீசூவில் உணவு விடுதி ஒன்றில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் மூன்று அமைச்சர்கள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டனர்.
2012 பிலிப்பீன்சில் போபா சூறாவளி தாக்கியதில் 475 பேர் உயிரிழந்தனர்.
2014 சப்பான் (162173) 1999 ஜேயூ3 என்ற சிறுகோளை நோக்கி ஆறு-ஆண்டுகள் திட்டமாக ஹயபுசா 2 என்ற விண்கலத்தை தனேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து ஏவியது.

Post a Comment

Previous Post Next Post