ஆதார் அட்டை விண்ணப்பிக்கும் முறைகள்:

ஆதார் அட்டை பெற பதிவு செய்ய கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. ஒருவர் ஒரு முறை மட்டுமே ஆதார் பதிவு செய்ய வேண்டும்.

Tamilmayon


தேவைப்படும் ஆவணங்கள்:


  1. அடையாள அட்டை
  2. இருப்பிடச் சான்று.
  • அடையாள அட்டைக்கு சான்றாக வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, அரசு ஐடி கார்டு இவற்றுள் ஒன்றை நீங்கள் வழங்கலாம்.
  • இருப்பிடச் சான்றாக கடைசி மூன்று மாதங்களுக்குள் செலுத்திய தண்ணீர் கட்டண ரசிது, மின்சார கட்டண ரசிது அல்லது தொலைபேசி கட்டண ரசீது) இவைகளில் ஏதேனும் ஒன்றை சான்றாக வழங்கலாம்.
  • ஒரு வேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், எம்.பி. / எம்.எல்.ஏ. / கெசட்டட் ஆபீசர் / தாசில்தார் / பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ்கள் சான்றாக எடுத்து கொள்ளலாம்.

ஆதார் பதிவு:

பிறகு, பதிவு படிவத்தை ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து அதனை நிரப்ப வேண்டும். படிவத்தை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையமுகவரிக்கு சென்று படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


படிவத்தை பதிவிறக்கம் செய்ய:


https://uidai.gov.in/images/aadhaar_enrolment_correction_form_version_2.1.pdf 


விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.


அடையாளச் சான்று மற்றும் முகவரியின் சான்று போன்ற துணை ஆவணங்களுடன் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.


பயோமெட்ரிக்ஸ் தகவல்கள்:

  1. புகைப்படம்
  2. கைரேகை
  3. கண்ணின் கருவிழிப்படலம்
5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் - பெற்றோரின் / பாதுகாவலரின் பெயர், ஆதார் மற்றும் வழங்க வேண்டிய பயோமெட்ரிக்ஸ்.
  • வழங்கப்பட்ட அனைத்து விபரங்களையும் மதிப்பாய்வு செய்யுங்கள், மறுஆய்வு செயல்பாட்டின் போது தேவைப்பட்டால் ஏதேனும் திருத்தங்கள் செய்து முழுமையான சேர்க்கை செய்யுங்கள்.
  • புகைப்படம் போன்றவை பதியப்பட்டு ஒரு தற்காலிக எண் வழங்கப்படும். - இந்த எண் 28 இலக்கங்களை கொண்டதாக இருக்கும்.
  • முதல் 14 எண் அத்தாட்சி எண்ணாகும் மீதமுள்ள 14 இலக்க எண் பிறந்த தேதி மற்றும் நேரத்தை குறிப்பது ஆகும். தற்காலிக எண்ணை வைத்து ஒருவரின் ஆதார் விபரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
  • 14 இலக்க பதிவு எண்ணைக் கொண்ட ஒப்புதல் சீட்டை சேகரிக்கவும். இவை ஆதார் அட்டையின் நிலையை சரிபார்க்க பயன்படுகிறது. உங்கள் ஆதார் அட்டை கிடைக்கும் வரை ஒப்புதல் சீட்டு பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும்.
  • நீங்கள் அளித்த தகவல்கள் சரிபார்க்கப்படும். அவை சரியாக இருந்தால் ஆதார் அட்டை உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். ஆதார் எண் கிடைக்க 60 முதல் 90 நாட்கள் வரை ஆகலாம்.
  • ஆதார் கடிதங்களை அச்சடிப்பது வினியோகிப்பது இந்தியா போஸ்ட்டின் வேலை. ஆதார் கடிதங்களை உரியவரிடம் கொடுக்க இந்தியா போஸ்ட் சாதாரணமாக 3-5 வாரங்கள் எடுத்துக்கொள்வார்கள்.
விண்ணப்பத்தின் நிலையறிய:
  • statusLink இந்தத் தளத்திற்குச் சென்று உங்களுக்கு வழங்கப்பட்ட எண்ணையும், தேதியையும் குறிப்பிட்டு விண்ணப்பத்தின் நிலையைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
  • இருப்பினும், ஒரு நபருக்கு ஆதார் அட்டை தேவைப்பட்டால் மற்றும் அவசரமாக இருந்தால், ஆதார் அட்டையின் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், இது இ-ஆதார் என்றும் அழைக்கப்படுகிறது.
இ-ஆதார் அட்டையை ஆன்லைனில் பெற நீங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:
  1. UIDAI இன் ஆதார் அட்டை அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
  2. பதிவு எண் அல்லது ஆதார் எண்ணைப் பயன்படுத்தி படிவத்தை நிரப்பவும். உங்களிடம் பதிவு எண் இருந்தால், பதிவு எண்ணை உள்ளிடவும். மேலும் அதனுடன் ஒப்புதல் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள படி தேதி மற்றும் நேரத்தை உள்ளிட வேண்டும்.
  3. பின்னர் உங்களின் பெயர், பின்கோடு மற்றும் நீங்கள் உங்கள் விண்ணப்பத்தில் பதிவு செய்த தொலைபேசி எண்ணிற்கு பதிவு செய்ய வேண்டும்.
  4. ஆதார் அட்டை எண் உங்களுக்கு UIDAI மூலம் முன்பே குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அதனை பயன்படுத்தியும் நீங்கள் உங்கள் ஆதாரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  5. உங்களின் பெயர், அஞ்சல் எண், தொலைபேசி எண் மற்றும் ஆதார் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.
  6. அனைத்து விபரங்களும் உள்ளிடப்பட்ட பிறகு OTP உருவாக்கப்படுகிறது, இது ஆதார் கடிதத்தின் வண்ண பதிப்பைப் பதிவிறக்க உதவும், இது ஆதார் அட்டையைப் போலவே செல்லுபடியாகும்.
ஆதார் அட்டையின் பயன்கள்:
  • கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு மிகப் பயன்தரக் கூடியது.
  • அரசாங்கத்தின் நலம் தரும் திட்டங்கள் மக்களுக்குப் எளிமையாக சென்றடைய உதவும்.
  • வருமான வரி தாக்கல் செய்ய, நிரந்தர கணக்கு அட்டை எண் (PAN) வாங்க, பி.எஃப்., மூலமாக ஓய்வூதியம் பெற, வீட்டு சமையல் எரிவாயு இணைப்பினை பெற, பாஸ்போர்ட் பெற, மத்திய /மாநில அரசுகள் அளிக்கும் நலத்திட்டங்கள் மற்றும் நிதி உதவியினைப் பெற நமக்கு ஆதார் அட்டை பயன்படுகிறது.



Post a Comment

Previous Post Next Post