பாடல்,இசை,நடனம்,குரல் அனைத்தும் அருமை. மதன் மற்றும் பாடல் குழுவினர்களுக்கு பாராட்டுக்கள்.

Neo Ravanan


"Neo Ravanan Song" Song Info

Song
Neo Ravanan
Artists
Madan Gowri ft. Anthakudi Ilayaraja
Lyrics
Thanikkodi
Music
Bala Raavanan

Lyrics Box

ஏ மக்கா ஏ ராசா
ஊரோட உறவோட நேசா
வா மக்கா மகராசா
வரலாற நீ மாத்து மாஸா

அடைகோழி பறவை தாண்டா
ஆகாயம் அறியாதுடா
பருந்தோட மோதும் போது துறும்பாகும் வானம் தாண்டா

ஆராய்ஞ்சு ஆராய்ஞ்சு பாரேண்டா
ஏடாண்ட எழுத்தெல்லாம் நீதாண்டா

இனமென்ன நிறமென்ன அவனென்ன இவனென்ன
அனைவரும் சமமென வழி செய்ய புறப்படு
உலகுக்கு உரியவன்
வியர்வைய வெதச்சவன்
இறைவனை விடவும்
மேலயின்னு சொல்லிக்கொடு

மானம் என்றே வென்றேனே
மானம் என்றே வென்றேனே
மானம் என்றே வென்றேனே

மையால வர்ணம் செஞ்சா
வாழ்த்துச் சொல்லு
ஏய்
பொய்யாலே வர்ணம் செஞ்சா
எத்தித் தள்ளு

எல்லோரும் சமமாக
இருந்தாத்தான் நேர்மை நீதி
இல்லாத சாதிக்கு
பகையேண்டா முட்டா மூதி

சுமை சுமந்தவன் பரம்பரையே
தலை விதியொரு புனைகதையே
இமை திறந்திடு எரிமலையே
எழு எழுதிடு விடுதலையே

அரசாங்க மங்கூனி
அதிகார கங்காணி
எதிர் கேள்வி கேக்காட்டி எதிராவ உனக்கே நீ

பல நூறாண்டா உள்ள கோபமடா
தொட்டு பாரேண்டா நான் ராவணன்டா
பல நூறாண்டா உள்ள கோபமடா
தொட்டுப் பாக்கச்சொல்லு நான் ராவணன்டா

தகுதியும் திறமையும்
பொறப்புல இருக்குதா
பொடனியில் அடிச்சு நீ கலங்கடிடா
அறிஞன ஞானிய
அரக்கனின் இனமென
உருட்டுன உருட்ட நீ புறக்கணிடா

துண்டான சம்புகர்கள்
சொல்லாகு நீ
ரெண்டான கட்டைவிரல்
வில்லாகு நீ

மறுபடி சாத்திரம் அதுஇது
என்பவன்
தோல உரிச்சு
பறைய அடிடா...

"Neo Ravanan Song" Song Video

Song : Neo Ravanan Artists : Madan Gowri ft. Anthakudi Ilayaraja Lyrics : Thanikkodi Music : Bala Raavanan

Post a Comment

Previous Post Next Post