Usuraiya Tholaichaen Lyrics in Tamil
Song Name | Usuraiya Tholaichaen Lyrics in Tamil |
Singer(s) | Stephen Zechariah | Pragathi Guruprasad |
Composer(s) | Stephen Zechariah |
Lyricist(s) | Suriavelan |
Music(s) | Stephen Zechariah |
Featuring Stars | Suriavelan Rupini Anblagan |
Album | Album |
Music Label | Tamil |
Lyrics Box
அட உசுரைய தொலைச்சேன் உனக்குள்ள
இந்த உலகினில் உனைபோல் யாரும் இல்ல
ஆசைய விதச்சன் உனக்குள்ள
உன்னை போல் ஒருத்தன பார்த்ததில்ல
அழகாலே உன் அழகாலே
கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே
உன்னாலே இனி உன்னாலே
விடியும் என் நாள் முடியாதே
நம் காதல் சொல்ல மொழி தேவை இல்ல
என் ஜீவன் என்றும் நீதானே
ஓர் பார்வையாள என சாச்சிட்டானே
விழி மூடவில்ல உன்னாலே
எந்தன் தேடல் உனை சேரும்
உந்தன் பெயரை உயிர் சொல்லும்
இமை மூடும் தருணங்களில்
உனை அருகினில் உணருகின்றேன்
இரவுக்கு நிலவாக நீ தோன்றினாய்
தரை இறங்காமல் தள்ளி நின்று
வதம் செய்கின்றாய்
நான் போகும் வழியெல்லாம் ஒலி வீசினாய்
என் உலகெங்கும் அழகாக நிறம் பூசினாய்
உன்னாலே உயிர்த்தேனே
உயிர் காதல் உணர்ந்தேன் பெண்ணே
நம் காதல் சொல்ல மொழி தேவை இல்ல
என் ஜீவன் என்றும் நீதானே
ஓர் பார்வையாள என சாச்சிட்டானே
விழி மூடவில்ல உன்னாலே
இணை பிரியா வரம்கேட்பேன்
உனை பிரிந்தால் உயிர் துறப்பேன்
விரல் பட்டு பூ வாசம் பொய்யாகுமா
உன் இதழ் பட்டால் என் சுவாசம் மெய்யாகுமா
நீ தூங்கும் நேரம் உன் கன்னம் ஓரம்
உனை தீண்டும் என் தாபம்
உடைந்தே போகும்
என் இதயத்தில் யுத்தம் செய்யாதே
அட உசுரையா தொலைச்சேன் உனக்குள்ள
இந்த உலகினில் உனைபோல் யாரும் இல்ல
ஆசைய விதச்சன் உனக்குள்ள
உன்னை போல் ஒருத்தன பார்த்ததில்ல
அழகாலே உன் அழகாலே
கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே
உன்னாலே இனி உன்னாலே
விடியும் என் நாள் முடியாதே
நம் காதல் சொல்ல மொழி தேவை இல்ல
என் ஜீவன் என்றும் நீதானே
ஓர் பார்வையாள என சாச்சிட்டானே
விழி மூடவில்ல உன்னாலே
Wacth Video
Post a Comment